- Wednesday
- April 30th, 2025
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான வழக்கொன்றுக்காக தொடர்ந்து ஐந்து தடவை நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது. (more…)
யாழ்.புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில், பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த நெடுந்தீவைச் சேர்ந்த 19வயது இளைஞர் மீது பௌத்த பிக்கு (நயினாதீவு விகராதிபதி) ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.நேற்று மாலை 3மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த யோ.லோரன்ஸ் (வயது19) என்ற இளைஞர், நெடுந்தீவு சமாசத்திற்குச் சொந்தமான படகில் பொருட்களை ஏற்றிக்...

யாழ்ப்பாணத்தில் உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பொருட்டும் வீதி அகலிப்புக்காக உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பிராந்திய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஜி.எல்.பெரகரா இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.இதன்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் அவருக்கு விசேட பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.அத்துடன் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக ஸ்ரீ குணநேசன் பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரும் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றுள்ளார் என யாழ். பொலிஸ் நிலையம்...

நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்கள் மடக்கிப்பிடித்துக் கடுமையாகத் தாக்கியவேளை, கடற்படையினரும் பொலிஸாரும் தலையிட்டு அந்த நபருக்கு உயிராபத்து...

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார். (more…)

அரச வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் பலர் பொதுமக்களுக்கு அரச கரும செயற்பாடுகளை செய்வதற்கு ஆர்வமற்றுள்ளனர் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.யாழ். வேம்படி மகளிர் பாடசாலையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வடமாகாண அரச அதிகாரிகளுடன சந்திப்பிலே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

கஸ்தூரியார் வீதியில் வாகன சாரதிகளுக்காக வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகையில் தமிழ் சொல்லிற்குரிய ஆங்கிலப் பதம் ( வியாழன்-wednesday) வேறுபட்டுக் காணப்படுவதனால் தாம் சிரமப்படுவதாக வாகனச் சாரதிகள் தெரிவித்தனர்.கஸ்தூரியார் வீதி ஒருவழிப் போக்குவரத்துப் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வீதியின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்பட்டு ஒரு பக்கம் மட்டும் வாகனங்களை...

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் அண்டிய தீவுப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமைகளை காண்காணிக்கவும், பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கும் இந்த விஜயம் வழியமைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் விசேட புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் பாதுகாப்புச் செயலாளர் இன்று அங்குரார்ப்பணம் செய்ய உள்ளார்....

சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை தீர்க்கப்படாததால் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்று நிருபத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லை எனவும், 25 வீதமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி கடந்த மாதத்தில் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்....

இலங்கையிலிருந்து 269 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பலகோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டு ஆபிரிக்க நாடுகளான டோஹோ மற்றும் மாலி முதலான நாடுகளுக்கு கூட்டிச்சென்று அநாதரவான நிலையில் அவர்களைக் கைவிட்ட பிரதான சந்தேக நபரான அருணகிரிநாதன் ஜெயரூபனைக் கைதுசெய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பலகோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டு காலமாக காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்பு பணிகளின் காரணமாக இந்த வீதியால் பயணம் செய்யும் வாகனங்களும் பொது மக்களும் பாடசாலை மாணவாகளும் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் தொடர்ந்து அந் நிலையே காண்படகிறது....

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்துடன் மேலதிக எரிபொருள் கட்டணம் ஒன்றை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் டாக்டர் ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்மின்சார உற்பத்திக்காக எரிபொருள் கொள்வனவுத் தொகை அதிகரித்துள்ளமையை சமாளிப்பதற்காக இந்த மேலதிக எரிபொருள் கட்டணம் அறவிடப்படுகின்றதாகவும்.உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்தால் இப்புதிய...

கடந்த வார இறுதியில் இருந்து சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி இணைய சேவைகள் நேற்றிரவில் இருந்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இது தொடர்பாக யாழ் ரெலிகொம் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி பொறியலாளர்களினால் மேற்படிப்பிரச்சனை சீர்செய்யப்பட்டுவிட்டதாக நேற்றிரவு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இன்று காலை ADSL இணையப்பாவனையாளர்கள் மத்தியில்...

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும். நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்திய செயலைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் குதித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:- (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து தொலைக்காட்சி சேவை நடத்திவரும் நிறுவனமொன்று விநியோகித்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொலைகாட்சி சேவைக்கென பெருமளவு பணத்தைச் செலுத்தி இணைப்புக்களை வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, (more…)

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தத்தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரெலிகொம் இன் தொழில்நுட்பப்பிரிவில்...
”போருக்கு பிந்தைய சூழலில் திறன் அபிவிருத்தி ” என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழகம் வரும் ஜூலை 20ம் திகதி நடாத்தவிருக்கும் மாநாட்டுக்காக ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டிருக்கிறது பட்டியலிடப்பட்ட துறைகளில் இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக தகவல்களை http://www.jfn.ac.lk/juice2012/ இல் பார்வையிடலாம்.பல்கலைக்கழக மாணவர்கள் துறைசார் வல்லுனர்கள் கூட ஆய்வுகளை சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது...

கொழும்பில் அண்மையில் இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வடமாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.யாழ். இந்துக் கல்லூரி மாணவரான செங்கதிர்ச்செல்வன் சேந்தன் என்ற மாணவனே வட மாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவருக்கான தங்கப்பதக்கத்தை பேராசிரியர் எஸ்.ஏ.நோபேற் வழங்கிக்...

All posts loaded
No more posts