‘U’ சான்றிதழ் பெற்றது ‘மாவீரன் கிட்டு’

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’ படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது, இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தணிக்கைக்கு சென்ற ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts