TNA முக்கியஸ்தர் சிலர் அரசுடன் இணைவு!

tnaஅடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில் நேற்று மாலை தெரிவித்தார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐ.ம.சு.மு. கூட்டத்தில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த சிலர், சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் அரசுடன் இணைந்து கொண்டனர். வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் வசந்தநாதன் சிவானந்தன். வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீரசிங்கம் சிவகுமாரன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை செல்வராஜா, முன்னாள் வலிமேற்கு பிர. சபை தலைவரும் சுயேச்சைக்குழு 3இன் முதன்மை வேட்பாளருமான நல்லநாதன் திரிலோகநாதன், சுயேச்சைக்குழு 3 வேட்பாளர் கணபதி கதிரவேலு, வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சூசைப்பிள்ளை சசிதரன் ஆகியோரை சு.கவில் இணைந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி

அடுத்த வருடம் காங்கேசன்துறை வரையில் யாழ்.தேவி ரயில் சேவையை கொண்டு வருவோம் – யாழில் ஜனாதிபதி

Related Posts