- Wednesday
- January 22nd, 2025
கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் நேற்றையதினம் (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று மாலை (06)...
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்னர். இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற...
வடக்கு – கிழக்கில் உள்ள 2 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு ஆயுட்காலம் தடை விதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதால், யாழ்ப்பாணம், தென்கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களே இந்த வாழ்நாள் தடையை எதிர்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர்...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் whatsapp சமூக வலைத்தளங்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற களவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்று காலப்பகுதியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாங்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த...
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (17.07.2020) பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார். தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை காரணமாக...
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இன்று காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயுள்ளனர். இதன் பின்னர் அவர்களை கண்டுபிடிக்க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும் அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணப்...
யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும்...
கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கரும்புலிகள் தினமான நேற்றுக் காலை முதல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவம், பொலிஸ் விசேட...
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது. அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் பீடாதிபதி ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை நேற்று பொலிஸ் சைபர் குற்றவியல்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகங்களில்...
அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில்...
Loading posts...
All posts loaded
No more posts