- Monday
- February 24th, 2025

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த எட்டாம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை...

யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசு எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் சந்தேகமடைந்துள்ளதையடுத்து, புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய தூபி அமைக்க பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தையும் முடித்து வைத்தார். எனினும், உடனடியாக தூபி அமைக்க துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இன்றே… இப்பொழுதே தூபி...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை...

வடக்கு- கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, ‘இறந்தோர் நினைவுச் சின்னம்’ இடித்தகற்றப்பட்டமை...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார்...

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவிரவாக நீடித்து, இன்று காலையும் நீடிக்கிறது. விடிகாலையில் சற்று அமைதியான நிலைமை காணப்பட்டாலும், மீண்டும் தற்போது களம் சூடு பிடிக்கிறது. பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தற்போது அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பொதுமக்கள் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர். நேற்று...

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது எனவும்,. இதற்கு...

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்தியத் துறை மாணவர்களின் பாவனைக்கென அந்த துறையின் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ரீசோட்டுகளின் பின் புறத்தில் பல்கலைக்கழக இலட்சினை பொறிக்கப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் துணைவேந்தர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சித்த வைத்தியத் துறை மாணவர் ஒன்றியத்தின் தலைவர்...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிரேஷ்ட...

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடயத்தை...

யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால் திருவெண்பா ஒதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கபட்டது. இன்றைய கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும் மற்றும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கடந்த மாதம் 8ம் திகதி நடைற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் அதேவேளை, இத்தகைய சம்பவங்கள் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெறுவதற்கு ஏதுவான பின்னணிக் காரணியாக இருக்கும் நிர்வாக ரீதியான குறைபாடுகளையும் சீர்செய்யுமாறு மாணவர் ஒழுக்காற்றுச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தனிநபர் விசாரணையை நடாத்திய யாழ்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மாணவன் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட...

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறது. 2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதெனிய பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று காலை இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடதிபதியுமான பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி...

யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு துணைவேந்தரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது. தற்போதைய துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமாகிய பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் என்ற குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தனது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், மாணவன் இன்று வகுப்புகளுக்கு சமூகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக...

All posts loaded
No more posts