- Sunday
- February 23rd, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன...

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில்...

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும்...

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும்...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கோவிட்- 19 தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் நாளை வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கோரோனாப் பெருந்தொற்று...

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 விரிவுரையாளர்களுக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் மூவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்...

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். எனினும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் இதனைத் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாத் தொடர்பில் தீர்மனங்களை இயற்றுவதற்காக இன்று புதன்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா...

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டம்பர் 16,17,18ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய தனிமைப்படுத்தல்...

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த...

எதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு நடத்துவதற்கு அனுமதி கோரி யாழ்.பல்கலைக்கழகத்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டில் இப்போதுள்ள கோரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள்...

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது மருத்து பீட, பீடச் சபை உறுப்பினர்களுடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி...

எதிர்வரும் 16,17. மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்த 3பேர் பல்கலைக்கழகத்தின் நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொரோனா...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள்...

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும்...

All posts loaded
No more posts