- Sunday
- February 23rd, 2025

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில், வடக்கு கிழக்கில் ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக...

யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன யாழ் பல்கலைகழக...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ்....

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 6 ஆம் திகதி , புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர்...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக...

அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வில் வெளிவந்துள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த செயற்பாடுகள் கவலையளிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 51% க்கும் அதிகமானோர் வாய்மொழி...

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறிதிருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம்...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்ற செல்வி தில்காந்தி நவரட்ணம் பட்டமளிப்பு விழாவின் போது உயிருடன் இல்லாத நிலையில் அவருக்கான சிறப்புப் பட்டம் அவரது தயாரிடம் வழங்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறையில் சிறப்புத்...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(வியாழக்கிழமை) பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, இன்றைய தினம் ஆரம்பமாகி நாளை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது. இன்றும்...

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, ,இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்....

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் எனவே, அதனை அங்கீகரிக்குமாறும் கோரியே மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார்....

யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் நேற்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில்...

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர்...

யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் மாணவர், விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் ஒருவர்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத்துக்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவனரும் சைவப் பெரு வள்ளலாருமான சேர்.பொன் இராமநாதனின் 91ஆவது குருபூசை, இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர்.பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும் சபா மண்டபத்திலுள்ள உருவப்படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா...

All posts loaded
No more posts