- Thursday
- April 3rd, 2025

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் (புதன்கிழமை) இப் போராட்டம் இடம்பெற்றது. இதன் போது “அநீதியான வரிவிதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி”...

இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக...

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேலும்...

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த 21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்குமிடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது....

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் நான்காம் வருட மாணவர்களுக்கும் , முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பில் முடிவடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை...

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். [caption id="attachment_115664" align="aligncenter" width="612"] Concept of city life, strangers, dramatic stories[/caption] வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து...

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நவம்பர் 2ஆம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்குக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள்...

பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தின் போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த...

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக...

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி...

தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தலில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் பாரிய சந்தேகங்களை எழுப்புவதாக யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் சாடியிருக்கின்றது. தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற முரண்பாடுகள் தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே குறித்த விடயம் தொிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின்...

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம், இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணியளவில் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது தியாக தீபம் தீலிபனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து...

All posts loaded
No more posts