- Sunday
- February 23rd, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து...

யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு இடம்பெற...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை மதியம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதேநேரம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் பிரதேசத்தில் இன்று கரும்புலிகள் நாள் நினைவு தினம் உணர்புபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தியாகி பொன்.சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (05) மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி...

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர். இதன்போது சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்.பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர்,...

யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டட உபகரணங்கள் காணாமல்போனமை தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறுகிறது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறுகிறது என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரான சிரேஷ்ட...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போதுது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம், பொதுமக்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர். குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின்...

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். போதைப்பொருளை விற்பனை செய்யும் நபரொருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக நேற்று முன்தினம் (09.04.2023) மாணவர்கள் தங்கியிருந்த...

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தெற்கில் செய்துகாட்டினால் இணைந்து போராடத் தயார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், வசந்த முதலிகேவிடம் தெரிவித்துள்ளனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவத்தை கண்டித்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரே அவர்கள் இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளனர். அண்மையில் தம்மால் கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என வசந்த முதலிகே ஊடகங்களுக்கு...

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது. இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து...

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார நிகழ்வுகளின் போது, 3 ஆம் வருட மாணவர்களால், 2 ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் முறை சார்ந்த விசாரணையை...

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள்...

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் (புதன்கிழமை) இப் போராட்டம் இடம்பெற்றது. இதன் போது “அநீதியான வரிவிதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி”...

இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக...

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேலும்...

All posts loaded
No more posts