- Wednesday
- January 22nd, 2025
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மாவீரர் நாள் நவம்பர் 27 யாழ் பல்கலைக்கழக சமுகம், மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஏனைய மாணவர்களின்...
யாழ் பல்கலைக்கழகத்தின் இரு கலைத்துறை மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பீடங்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒரு மாத காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பேராட்டத்தை ஆரம்பிப்பதாக அவர் கூறினார். கடந்த மாதம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டம் மத்திய அமைச்சர் சுவாமிநாதன் உடனான பேச்சுவார்த்தைகளின் பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து மதியம் 12.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்....
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்துள்ளார். இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவியலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தனர்...
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ளதுடன் வலிவடக்கில் மேலதிகமாக 460ஏக்கர் காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலமையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான...