- Sunday
- December 22nd, 2024
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும்...
மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக...
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். இதன்போது மாணவர்கள் சிலரால் இடையூறு...
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணி சுவாஸ்திகா அருலிங்கம் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி...
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் இன்று சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சித்தாண்டியில் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், யாழ்ப்பாண பல்கலைகழகத்தை சேர்ந்த 5 மாணவர்களும், கிழக்கு...
நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ வுடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்துருந்தார்....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்குப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே 18 நினைவுத் தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரும், விசுவமடு மற்றும் கட்டுடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமகன்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இருவருமாக மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகள்...
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களுக்கு மாணவர்களால்...
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது இன்று (திங்கட்கிழமை) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலமையில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக...
வீதியில் செல்வோரை மிரட்டி கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் நேற்றையதினம் மாணவி விரிவுரைக்கு செல்லாது அறையில் தனித்து இருந்ததாகவும், சக மாணவிகள் அறைக்கு வந்த வேளை மாணவி...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சென்று சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, இன்று (19) ஆரம்பமாகி தொடர்ந்து 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து...
யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு இடம்பெற...
Loading posts...
All posts loaded
No more posts