- Wednesday
- January 22nd, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத்திரிபால...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார். முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட அடுத்த நிலையில் உள்ளவர் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து துணைவேந்தராக வந்திருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைவேந்தர்கள் இவ்வாறு அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து பதவிக்கு வந்தால் மாணவர்கள் மதிப்பார்களா?...
யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தமது கடமைகளை போறுப்பேற்றுக்கொண்டார். இது தொடர்பாக நேற்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையடுத்து புதிய துணைவேந்தர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில் - புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான இழுபறிகளுக்கு மத்தியில், புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வரை பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தைத் துணைவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. 18.04.2017 தினசரியொன்றில் 'புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்கள்' என்ற தலைப்பில் வெளியான செய்தியொன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாக சில விடயங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விடயம் தொடர்பாக சங்கத் தலைவரோ அல்லது இணைச்செயலாளர்களோ பத்திரிகையில் வெளியிடும்பொருட்டு செய்தி எதனையும் வழங்கவில்லை என்பதோடு வெளிமாவட்ட மற்றும்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் 353 நிரந்தர விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே உயர்கல்வி அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”யாழ்.பல்கலைக்கழகத்தில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இன்று இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...
உண்மையான அறத்தின் பாற்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய உணவு தவிர்ப்பு போரட்டம், மாணவர்கள் சிலரின் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது, கலைப்பீடமாணவர்கள் இச்சமூகம் தொடர்பில் காட்டிவரும் பொது அக்கறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.என கலைப்பீடச் சபை வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் விதிக்கப்பட்ட வகுப்புத்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் வியாழக்கிழமை (30) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (31), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்தவர்களாவர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக,...
யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
பல்கலைக்கழகத்தின் மாணவிகளின் புதிய விடுதியில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் மின் ஒழுக்கு அல்ல. இருப்பினும் சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போது குறித்த விடுதியில் இருந்த மாணவிகளிற்கு மாற்று விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக் கழகத்தினில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்திற்குப்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாதரவத்தை மற்றும் கொடிகாமத்தை சேர்ந்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் இருவரே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24ஆம்திகதி குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 8 மாணவர்களை ஏனைய மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தி கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இதில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் விடுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.மின் ஒழுக்கினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
யாழ்பாண பல்கலைக்கழகத்தின் இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முற்பகல் 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஐனவரி 10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது....
யாழ்.பல்கலைகழக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவ வழக்கு விசாரணை மாணவர்கள் பரஸ்பரம் சமாதானமாக செல்வதாக மன்றில் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட முதலாம் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு கடந்த யூலை மாதம் 16ம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் இணைத்து...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி...
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த போராட்டம் ஊழியர்களுக்கு இடையே இருந்த சம்பள முரண்பாடுகள் மற்றும் பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்தி செயற்படுத்த இரு மாத கால அவகாசம் கேட்டுள்ளதாக...
Loading posts...
All posts loaded
No more posts