- Wednesday
- January 22nd, 2025
அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் வட மாகாணம் முழுவமும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களால் கையெழுத்துகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது....
அரசியல் கைதிகள் விடயத்தில் துரிதமான பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசியல் கைதிகளின் துரித விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவ சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்துள்ள போதிலும்,...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட...
தமது விடுதலைக்கான பெரும் பொறுப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பொறுப்பெடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு கண்ணீர்க் கடிதம் அனுப்பியுள்ளனர். “யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு, பூட்டிய சிறையில் இருந்து ஓர் அன்புரிமை வேண்டுகோள்!” எனத் தலைப்பிட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் ஒரு வருட நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நினைவுதின நிகழ்வில், இவ்விரு மாணவர்களுக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில், சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன்,...
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (19) வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் அரசியல் கைதிகள் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழமைபோல கால அவகாசம் கோரிய...
அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து...
வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஏ9 வீதியை மறித்து போராட முற்பட்ட யாழ் பல்கலைக்கழக ஊழிய சங்க இணைச் செயலாளரை பொலிஸார் ஒருவர் காலால் தட்டிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் தலைமைகள் இனியும் மௌனம் காக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கை அநுராதபுரம்...
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறையில் உள்ள...
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பூங்கண்ணன், செயலாளர் எம்.முகுந்தகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”யாழ்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியமானது பின்வருவனவற்றை அறிக்கையிட விரும்புகின்றது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட எமது பல்கலைக்கழகமானது இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு இயங்கி வருகின்றது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தபோதும் இதுவரை குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும்...
டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விஞ்ஞான பீடத்தை எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 04ம் திகதி வரை மூட யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்...
செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் இ. விக்னேஸ்வரன் உட்பட பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்ப பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கும் , மருத்துவ பீடத்திற்கான 08 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் அடிப்படையில் ஒப்பந்தங்களுக்காக முறையே 424.43 மில்லியன் ரூபாவும் மற்றும் 564.67 மில்லியன்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க...
இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...
Loading posts...
All posts loaded
No more posts