- Wednesday
- January 22nd, 2025
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட மாணவன் மீது பெருன்பான்மை இனத்தினை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த மோதல் சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும் முன்னதாக பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். அது தொடர்பில் தெரிய வருவதாவது, சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின...
யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே மோதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்...
உலகெங்கும் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில்,...
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், ஏனைய அரசியல் கைதிகளின்...
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் 12ம் திகதி காலை முதல் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெற இருந்த...
மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை புறந்தள்ளி 33வது பொதுப்பட்டமளிப்பினை இரண்டு பகுதியாகவே நடாத்துவதற்கு யாழ் பல்கலை நிர்வாகம் தீர்மானத்துள்ளதாக அறிவித்தமைக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல் பகுதி டிசம்பர் 09 2017இல் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களை தவிர்த்து நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகைதருமாறு வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் இவ் அழைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள அதேவேளை தமிழரசுக்...
நிர்வாகத்தை முடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தவறானது. இப்போராட்டம் தோல்வியிலேயே முடியும் என யாழ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் நிர்வாகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. நிர்வாக முடக்கல் எதிரொலியாக 3 பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத்...
தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்றலில் இக் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம்...
யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று முதல் இடைநிறுத்தியிருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் மாணவர்கள் தமது நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 37வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தமிழ் அரசியல்...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ வணிக பீடம் ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் போராட்டத்தை கைவிடவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தாங்கள், தொடர்ந்தும் போராட்டத்தை நடத்துவோம் என...
அரசியல் கைதிகள் தொடர்பான பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடும் - 31-10-2017 ------------------------------------------------------------------------------------------------------- தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நிர்வாகம் முடிவு செய்தமைக்கு சிங்கள மாணவர்களின் நடவடிக்கையே காரணமென நம்பகமான தகவல் தெரிவித்தது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், கடந்த செப்ரெம்பர் 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எதிரான வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல்...
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கபடுகின்றது. யாழ்.பல்கலைகழகம் முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைகழக சமூகத்தினர் பல்கலை கழக வாயில்களை மூடி கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும்...
Loading posts...
All posts loaded
No more posts