முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி – பல்கலை. மாணவர்கள் அழைப்பு

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...

யாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு மனவருத்தமளிக்கிறது – முதலமைச்சர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு...
Ad Widget

நினைவேந்தல் நிகழ்வில் முதல்வருடன் இணைய பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கூட்டத்துக்கான பொது அழைப்பை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்தார்....

வட. மாகாண சபையின் அறிவிப்பு வேதனையளிக்கிறது: யாழ். பல்கலை சமூகம்

முள்ளிவாய்க்காலில் நடைபெறும் தமிழர் இனவழிப்பு நினைவுதினத்தை வடக்கு மாகாணசபை தாமே நடத்துவோமென அறிவித்துள்ளமையானது மனவேதனையைத் தருவதாக என யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி...

யாழ். பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை?

யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன....

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்!

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது. முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த...

யாழ் பல்கலைக்கழகத்தில் மே தினம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎நேற்று 01-05-2018 செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர்...

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நினைவாலயம் அமைக்க தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...

புத்தர் சிலை விவகாரம்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவத்துள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி...

தடைகளைத் தாண்டி யாழில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...

யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு

யாழ். பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் விபரங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14...

யாழ். பல்கலையில் தியாக தீபம் அன்னை பூபதியின் 30ஆவது நினைவேந்தல்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) தமிழர் தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ...

தொடர் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றியும் 108 தேங்காய் உடைத்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் போராட்டம் நடத்தினர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் சமீப நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட...

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம்

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கொடும்பாவி எரித்துப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவினர் போராட்டத்துக்கு குழப்பம் விளைவித்தமையினால் கொடும்பாவி எரித்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை...

யாழ். மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெறவுள்ளது. அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள்,...

சம்பளத் திகதி பின்னகரும் என்பதால் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் சதி !

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இயக்க தொடங்கியுள்ளது. இதனிடையே தமக்கான ஊதியத்தை பெற்றுக்கொள்ள துணைவேந்தர்,பீடாதிபதிகள் உள்ளிட்ட கல்வி சமூகம் பல்கலைக்கழக நிதியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகள் கோரப்பட்டுள்ளது. கல்வி சாரா...

ஆணைக்குழுவின் கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது. வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம் ஆரம்பம்!

தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், பிரதான வாயிற் கதவுகளை மூடல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக...

பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான செய்திக்குறிப்பு

யாழ் பல்கலைக்கழக ஊழியர்சங்க இணைச்செயலாளர் த.சிவரூபன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம்.. 09.03.2018 UEU/2017-2018/022 பத்திரிகைக் குறிப்பு (09.03.2018) இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும் 2. நாடு முழுவதிலுமுள்ள...

யாழ் பல்கலைக்கழக பதிவாளரின் முக்கிய அறிவித்தல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...
Loading posts...

All posts loaded

No more posts