- Sunday
- February 23rd, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பொங்குதமிழ் நினைவுத் தூபி திறக்கப்பட்டது. திரை நீக்கப்பட்ட தும் தமிழீழ விடுதலைப் புலி களினால் வெளியிடப்பட்ட தேசிய கீதமான ”ஏறுது பார் கொடி ஏறுதுபார்” என்கிற பாடல் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து புலிகளின் எழுச்சிக் கீதங்களும் ஒலிபரப்பப்பட்டன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி இன்று (17) திங்கட்கிழமை காலை திரைநீக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து நடத்தும் “தமிழமுதம்” மாபெரும் தமிழ் விழாவின் ஒரு அங்கமாகவே “பொங்குதமிழ்” தமிழரின் வரலாற்று பதிவு நிகழ்வின் நினைவுத் தூபி திரைநீக்கம் செய்யப்பட்டது. ஈழத்தமிழர்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிவன் ஆலயத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மதில் கட்டுவதற்காக மண்ணை தோற்றியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பையும், அங்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்த்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையினால் (இன்று) செவ்வாய்க்கிழமையன்று (28-08-2018) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (யாழ்-பல்கலை) தனது ஆதரவைத் தெரிவிப்பதுடன், தமிழர் தாயகத்தின் இதயபூமியாம் முல்லை மண்ணினைப்...

மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார். குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர்...

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பல்கலைகழக கல்விசார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின்...

வலிகாமம் கிழக்கு பகுதியில் பாதீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இதன் முதல்கட்ட முயற்சியாக நேற்று(திங்கட்கிழமை) புத்தூர் நிலாவரை பகுதியில் அதிகளவான பாதீனிய செடிகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் அதிகளவான பொது இடங்களில் பாதீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது....

யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ். பல்கலைக்கழகத்திலும் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவிடத்தில் நேற்று மாலை 06:05 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜீலை-5 கரும்புலிகள் தினமான நேற்று யாழ். குடாநாட்டின் முக்கிய இடங்களில் கரும்புலி நாள் நினைவு...

சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா, இன்னும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் இப்படி ஆவது? உள்ளிட்ட வாசகங்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு மீதான சுருக்க முறையற்ற விசாரணை...

தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன், எமக்கிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் (24) மாலை ஏற்பட்ட கைகலப்பு குறித்து, ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஜயசூரிய (வயது -26) மற்றும் சண் ருவான் (வயது – 26) ஆகிய இளைஞர்களே கத்திக் குத்துக்கு...

யாழ்.பல்கலைக்கழக வவுனியாவளாக முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவகை நடாத்திய பிரயோக விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் அனைவருக்கும் காலவரையறையற்ற வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் வவுனியாவளாக நிருவாகம் இந்த வகுப்புத்தடையை விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறாது என்பதுடன் வளாகத்திற்குள் வருவதற்கும் நிருவாகம்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் ஒன்றிலேயே அவர்கள் 25 மாணவர்களும் மொட்டையடித்தனர். சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம்...

யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (வெள்ளிழக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த பட்டமளிப்பு விழா வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இடம்பெறுகின்றது இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவம்,விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 1706 பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர். மேலும் இதன்போது சகல...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரைவிடுத்துள்ளது. அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது....

“மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6“ நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வில் தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நடைபெற்றது. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை, சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம் ஆகியன இணைந்து இந்தக் கலந்துரையாடலை நடத்தியது. அடையாளம் அமைப்பால் இது...

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரைலெட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழகப் பொலிஸாரின் வெறிச் செயலைக் கண்டித்தும் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதிவேண்டியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (28) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட்...

All posts loaded
No more posts