யாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டாம்...

பல்கலை. மாணவர்கள் படுகொலை: அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்....
Ad Widget

பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாளை நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலைமையிலையே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக்...

யாழ். பல்கலையில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்!

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கிற்கு நிவாரண உதவி!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக கிழக்கிற்கான வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கான உறவுப்பாலம் எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு யாழ் மாவட்டம் உள்ளடங்களாக நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வழங்கி...

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தினை யாழ்.பல்கலை வளாகத்தில்...

ரயில் விபத்தில் யாழ்.பல்கலை மாணவன் சாவு

தெல்லிப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்தார்.

தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை!

யாழ். பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் யாழ். பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன்...

பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்ஸன் மற்றும் கஜன் ஆகியோரது இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். எனக் கோரிக்கை விடுவது நல்லதல்ல – சி.தவராசா

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மிக மிக முக்கியமாக அமையும் அதேநேரம் முடிந்தவரையில் மகிந்தவிற்கு தீனிபோடாமலும் நாம் செயல்பட வேண்டியதும் இன்றைய தேவையாகவுள்ளது. என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் 107 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் அலையென திரண்ட மக்கள்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரை சென்றடைந்தது. இதன்போது வவுனியா மக்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமது ஆதரவையும் தெரிவித்து பெருந்திரளாக வவுனியா நகரில் கூடினர். ஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் பயணமானது வவுனியா நகரின்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டாம் நாள் நடைபவனி!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கிளிநொச்சியை நோக்கிய இரண்டாம் நாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று பளையை சென்றடைந்த மாணவர்கள், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர். யாழ். பல்கலைகழக வளாகத்தினுள்...

யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வருகை

போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கும் இரண்டு வருட திட்டமொன்றை அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்தார். இத்திட்டத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் கீழ் 23 மில்லியன் ரூபா ($140,000) வழங்கப்பட்டுள்ளது....

அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலை. மாணவர்கள் நடை பயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல –...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘தெற்கின் போராட்டம் ஜனநாயகம் வடக்கின்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது என மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள...

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த கலந்துகொண்டு...

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமி­ழீழத் தேசிய கீதம்!

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நேற்று பொங்­கு­த­மிழ் நினை­வுத் தூபி திறக்­கப்­பட்­டது. திரை நீக்­கப்­பட்­ட­ தும் தமி­ழீழ விடு­த­லைப் புலி ­க­ளி­னால் வெளி­யி­டப்­பட்ட தேசிய கீத­மான ”ஏறுது பார் கொடி ஏறு­து­பார்” என்­கிற பாடல் ஒலி­ப­ரப்­பப்­பட்­டது. தொடர்ந்து புலி­க­ளின் எழுச்­சிக் கீதங்­க­ளும் ஒலி­ப­ரப்­பப்­பட்­டன. யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் கி.கிருஸ்­ண­மே­னன் தலை­மை­யில் இடம்­பெற்ற இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணம்...

யாழ்.பல்கலையில் பொங்குதமிழ் பிரகடன நினைத்தூபி திரைநீக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி இன்று (17) திங்கட்கிழமை காலை திரைநீக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து நடத்தும் “தமிழமுதம்” மாபெரும் தமிழ் விழாவின் ஒரு அங்கமாகவே “பொங்குதமிழ்” தமிழரின் வரலாற்று பதிவு நிகழ்வின் நினைவுத் தூபி திரைநீக்கம் செய்யப்பட்டது. ஈழத்தமிழர்...

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிவன் ஆலயத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மதில் கட்டுவதற்காக மண்ணை தோற்றியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts