- Monday
- February 24th, 2025

நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். பல்கலை மாணவர்களினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு பல்கலைக்கழக...

நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சில பல்கலைக்கழகங்கள் இன்று (புதன்கிழமை) மீள திறக்கப்படவுள்ளன. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகிய பாடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பீடாதிபதிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து உத்தியோகபூர்வ பதிவாளர் அறிவிப்பார் என்று அறிய முடிகின்றது. பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக பதிவாளர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புத்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது,...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.05.19) இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பதாதைகளில் வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள்...

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து திங்கட்கிழமை சாதகமான பதில் கிடைக்கபெறும் என ஜானாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலார்கள் கூட்டாக தெரிவித்ததாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து மாணவ பிரதிநிதிகள் ஜானதிபதியை சந்திப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு வந்திருந்தனர். எனினும் ஜனாதிபதியை...

யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் பெற்றனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பொலிஸாரால் பதியப்பட்டது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் கடந்த 3ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் தியாகி திலீபனின் ஒளிப்படம் ஒன்று இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent Authority) வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய துணைவேந்தர் தெரிவுசெய்யப்படும் வரை இவரது நியமனம் செயலில் இருக்கும்.துணைவேந்தர்கள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான நியமனம் வழங்கப்படுவது வழமை. இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில்...

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதனை அறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தவற்றை அகற்றியிருக்க முடியாதா? பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என உறுதிப்படுத்துங்கள்” இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கினார் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி இடைநிறுத்தம் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் அணைத்து சமர்ப்பணங்கள் செய்ய சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உரிய அனுமதி வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில்...

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல்கலைக்கழக இயல்பு நிலையை குழப்புவதாக குற்றம் சாட்டி, நிலவி வரும் முரண்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் -பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்குமாறு கேட்டும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் - அவர்களை அச்சுறுத்தி செயற்படுவதை கண்டிதும்,...

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம்” என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் எனக் கூறிக்கொண்டு இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், மருத்துவபீட வளாகம், மாணவர் விடுதிகள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகள் படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதையடுத்தே அவர்கள் இருவரும்...

All posts loaded
No more posts