- Monday
- February 24th, 2025

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன் , யாழ்.பல்கலை கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலை கழக முன்றலில் நேற்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைகழக சமூகம் , மாணவர்கள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை நல்கி இருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 11 அமர்வுகளாக 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. இதன்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மருத்துவ...

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது. அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்....

தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை...

அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய பல்கலைக நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த ஒரு நிகழ்வையும்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழை். பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆள்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி...

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம்...

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டக்களத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்தோடு அவர்களுடன்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் குறிப்பிட்ட சில பணிநிலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876ம்...

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 15ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று முன்தினம் 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு...

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடு நீடித்த நிலையில் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்த 325 வரையானோர் பாதிக்ப்பட்டுள்ளனர். இ துகுறித்து பலஇடங்களில் முறையிட்டும் எவ்விதபலனும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வினை காணவும்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக பேரவைக்கு முன்வைக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஸ்திரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கும் வகையில் இந்த நியமனத்தை செய்வதற்கான அனுமதியை வரும் 29ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழக பேரவையில் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கோரவுள்ளார் என்று...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதிக் கட்டளை எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று திகதியிட்டுள்ளது. மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன் மற்ற மாணவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் 2ஆவது...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் நேற்று அரச தரப்புச் சாட்சியான காவல்துறை அலுவலகர் சாட்சியம் வழங்க முற்படுத்தப்பட்ட போதும் அவரால் முன்வைக்கப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட சாட்சியின் பிரதி சிங்களமொழி மட்டுமே காணப்பட்டதால் அதன் தமிழ்மொழிப் பிரதியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்....

All posts loaded
No more posts