வடக்கு-தெற்கு மாபெரும் துடுப்பாட்ட சமர் ! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி எதிர் கொழும்பு ஆனந்தாக்கல்லூரி

செப்ரம்பர் மாதம் 7ம் 8ம் திகதிகளில் இரு நாட்களைக் கொண்ட மாபெரும் துடுப்பாட்ட சமர் ஆனந்தாக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், ஆனந்தாக் கல்லூரியின் புகழ்பெற்ற ஆசிரியரும், பகுதித் தலைவருமான திரு.சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக இச்சமர் இடம் பெறுகிறது. (more…)

வட மாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதலிடம்

வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ். மாவட்டம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத் தமிழ்த் தினப்போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
Ad Widget

யாழ். இந்து மாணவன் தேசிய மட்டத்தில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம்பாய்தலில் யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வன் இரட்ணசிங்கம் செந்தூரன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். (more…)

இந்துக்களின் போர் சமனிலையில் முடிவடைந்தது

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார். (more…)

121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி!- அப்துல் கலாம் புகழாரம்

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி என்று யாழ்ப்பாணத்'திற்கு இன்று விஜயம் செய்துள்ள முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம் யாழ். இந்துக் கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக்...

யாழ் இந்துக்கல்லூரி மாணவனுக்கு தென்னாபிரிக்காவில் வெண்கலப் பதக்கம்!

தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் 1ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற்ற 8 ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர் இலங்கை சார்பாகவும், யாழ் இந்து கல்லூரி சார்பாகவும் வெண்கல பதக்கத்தை வென்றார்.இலங்கையில் இருந்து 5 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் அதில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில்...