- Friday
- December 27th, 2024
நாட்டில் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏப்ரல் 27ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். “கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது. இந்த மருந்து எதிர்வரும்...
மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும். எனவே தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அரசினையும் அரச பிரதிநிதிகளான வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர்கள், பொலிஸார் மற்றும் முப்படைகளையும் யாழ்.ஊடக அமையம் கோரி நிற்கிறது. இது...
கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி நேற்றையதினம் உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மாரவிலயைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடத்தை...
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில்...
கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அனலைதீவில் உள்ள ஒருவருக்கு கோரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம்...
நாட்டில் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை மாலை 4.45 மணிவரையான 48 மணிநேரத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 102 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று...
ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்hறு தெரிவித்தார். ‘ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஒரு...
மருந்துகள் முதலான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விசியோகிக்க தபால் ஊழியாகளின் உதவியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து அவசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆராயுமாறு தபால் மா அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல்...
சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்தகதியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையிலிருந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண நகர்ப் பகுதி சுத்தம் செய்யப்பட்டதோடு கழிவகற்றும் செயற்பாடும்...
சமூக வலைத்தளங்களில் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப் செயலிகளில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். “சமூக வலைத்தளங்களான முகநூல், இணையத்தளங்கள் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப், மெசெஞ்ஜர் உள்ளிட்ட செயலிகளில் கோரானா வைரஸ்...
இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா பரவுகின்ற விகிதத்தினை...
காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும். மருத்துவ...
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படவுள்ளது. சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த...
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தோற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று (24.03.2020) காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் , பொதுச் சுகாதார அதிகாரி , பொலிஸார்...
நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் மருந்தகங்களிலும் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடமாடும் மருந்துப் பொருள்கள் விநியோகத்தை முன்னெடுக்க மாவட்ட...
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே. மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார...
யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 04 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் அப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போதும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts