- Sunday
- November 24th, 2024
இன்று ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்...
மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் என யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தாவடியில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18...
வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்குரிய பிரத்தியோக பிரிவுகள் தற்போது வரையில் ஆரம்பிக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்வரும் காலத்தில் நிலைமைகள் மோசமடைந்தால் சிகிச்சை வழங்கும் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி.த.சத்தியமூர்த்தி பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கில் கொரோனா...
லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம...
யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றுத் தொடர்பில் 17 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தின் ஊடாக 17 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. கோரோனா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாணத்தில்...
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை,...
இலங்கையில் கோரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய ஹோமாகமவைச் சேர்ந்த 44 வயதுடையவர் இன்று அதிகாலை வெலிக்கந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தார். “இத்தாலியிலிருந்து மார்ச் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த அவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார்....
யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் மூன்று பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படுவர்களில் அரியாலையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறமி, 20 வயதுடைய இளைஞன் மற்றும் 36 வயதுடைய பெண்...
யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ்...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 3) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 24 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என குறித்த சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாயக் கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கு 3 காரணிகளை...
கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நான்காவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இடைக்கிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு தொடர்பாக 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இடைக்கிடையே ஊரடங்குச் சட்டத்தை...
அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3ஆவது உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றின்காரணமாக மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார். 73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை...
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலமநேற்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை...
கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த 72 வயதான இஸ்லாமியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு...
யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த...
மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை தந்த அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியும் கோரனா பரவலைக் கட்டுப்பாட்டுத்தும் செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை...
Loading posts...
All posts loaded
No more posts