- Thursday
- December 26th, 2024
"கோவிட் 19 வைரஸ் கிருமியால் ஏற்படுகின்ற தொற்றுநோயாகும். இது உலகளாவிய ரீதியிலும், எமது நாட்டிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த ஆபத்தான தருணத்தில் முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை வேலைத்தலங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதி செய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று வடக்கு...
கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம்...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. கொரோனோ வைரஸ்...
இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளாகி உறுதி செய்யப்பட்ட புதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார். இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும். இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் முழுமையாகக் குணமடைந்து வீடுதிரும்பினர் இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் அவர்களை வெலிகந்தையிலிருந்து...
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் பழகிய சிலரே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள்...
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின்/நியதிச் சட்டச் சபைகளின்...
அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக் கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை...
தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க அவர்கள் உருவாக்கியுள்ளார். கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு நேற்று (2020.04.17) பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டது. கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான...
யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட 15 பேரிடமும் காரைநகரைச் சேர்ந்த ஒருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ்...
தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இவர் இருவரும் கடந்த மார்ச்...
யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பிசிஆர் (Polymerase Chain Reaction) பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம். நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று நிலமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்...
பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் நேற்று வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மருத்துவ மாதிரிகள் மற்றும் அறிக்கைகளை அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைக் கடந்த முதலாம் மற்றும் 2ஆம்...
“மதபோதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15 தொற்றாளர்களுடன் கோரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறையினரது சேவை, யாழ்ப்பாணம் சமூகம் இன்று பெரும் சேதத்தைத் தடுக்க பங்களித்தது என்றால் மிகையாகாது” இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேரின் மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு...
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம்...
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி திருகோணமலையில் புதுவருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்றுகூடியவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ்...
Loading posts...
All posts loaded
No more posts