- Thursday
- December 26th, 2024
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 22 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த மூவர் யாழ்ப்பாணத்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடுதிரும்பும் 3 பேரையும் சேர்த்து...
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் வீடு திரும்பும் வவுனியாவைச் சேர்ந்தவருடன் சேர்த்து இதுவரை 6...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய...
நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹு வெயிடம் தெரிவித்தார். “இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக...
நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இறப்புக்கள் பதிவானால் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான 1000 உறைகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் சுகாதார அமைச்சு கோரியிருக்கிறது. கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான மேலதிக செயலாளர்...
சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதுதொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இந்த...
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு என மொத்தமாக கொரோனா...
இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 477 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் முயற்சிப்பார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனைத் தடுக்க முறையான செயன்முறையில் உறவினர்களிடம்...
பிந்திய செய்தி - இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது. மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு! வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல்...
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை...
“யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பரிசோதனைகள் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 16 பேருக்கு மட்டும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இங்கு மிக அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும். இங்கு மிக அவதானமாக நடந்து கொள்ளவேண்டும். ஒன்றுகூடிக் கதைத்தல், ஒருவருக்கு அருகில் செல்லுதல் அவ்வாறான செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி...
இலங்கை கடற்படையினர் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொலனறுவை பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை,...
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்குப் புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். நாட்டில் கோரோனா...
கொரோனா வைரஸ் தொடர்பான PCR பரிசோதனைக்காக தனியார் வைத்திய சாலைகளையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளொன்றுக்கு ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கொழும்பில் உள்ள தோட்டப்புறங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தொற்று குறித்த...
வடமாகாணத்தில் அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, இதுவரை வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவுபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த. காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் குறிப்பிடுகையில், “யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டிலிருந்து...
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....
கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த...
Loading posts...
All posts loaded
No more posts