- Wednesday
- December 25th, 2024
மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள...
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் 170 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக...
கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கோரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் தெரிவிக்க முடியும்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கொடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நிலையில், இவ்வாறு சந்தேகத்தின் பேரில் அனமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் அவர்களுக்கு அந்த தொற்று இருப்பது இதுவரை...
கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே...
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று (புதன்கிழமை) சுமார் 100 பேரும் இன்று 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கன்...
முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. ,தற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும். பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலைகளுக்கு...
கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...
கொரோனா வைரசின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது. இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில்...
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இலங்கைப் பெண்ணொருவர் தொற்று நோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று...
முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்த வாரம் முல்லைத்தீவு வந்த குடும்பஸ்தரின் விமான பயணத்தின் போது சீனாவினை சேர்ந்தவர்களும் இவரோடு பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான...
இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளில் அனுமதிக்கலாம் என அரசு அறிவித்திருக்கின்றது. இதன்படி ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக் கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சு காதார அமைச்சு அதிகாாி ஒருவா் கூறியிருக்கின்றாா். இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை...
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் தற்போது கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிறப்பு பரிசோதனைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் மலேசியாவின் கோலாலம்பூருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில்...
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. வூஹான் மாகாணத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் குறிப்பிடுகையில், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 230...