- Saturday
- November 23rd, 2024
வடமாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாகண சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்றது. வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், அடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனபடுத்தபட்டு...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (மார்ச் 17) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 44 பேர்) அதிகரித்துள்ளது. அத்துடன், இன்று மார்ச் 17 செவ்வாய்க்கிழமை மட்டும்...
கொரோனா (கொவிட்-19) வைரஸில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றின் முதல்கட்ட மனித பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது என்று அஸ்சோஸிகட் ப்ரஸ் நியூஸ் அகன்சியை (APNA) மேற்கோள்காட்டி பிபிசி ஆங்கில சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி வஷிங்கடனில் உள்ள கைசர் ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு நோயாளிகளிடம் இந்த ஊசியின் மனித பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் முதலாவதாக...
யாழ்.போதனா வைத்தியசாலையில் 73 வயதான பெண் ஒருவா் இன்று காலை அனுமதிக்கப்பட்டி ருக்கின்றாா். லண்டனில் இருந்து இலங்கை வந்த குறித்த பெண் யாழ்.கந்தா்மடம் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இந் நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில்...
உலகளாவிய தொற்றுநோயாக கோரோனா (COVID 19) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 16.03.2020 வரை 28 நோயாளிகள் கோரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை வடமாகாணத்தில் கோரோனாத் தொற்றுள்ள ஒரு நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை. ஆனாலும் இந் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான மாகாண சுகாதார சேவையினரின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வருமாறு: தனிமைப்படுத்தல் (Quarantine)...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் முன்னெடுக்கப்படும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களில் ஒரு வார காலத்திற்கு 24 மணித்தியாலங்களுக்கும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனைத் தவிர முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணியுறுமாறு பஸ் ஊழியர்களுக்கு ஆலோசனை...
மார்ச் 1 தொடக்கம் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களை பதிவு செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யாத நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது....
சுகாதார வைத்திய அதிகாரி, ஊர்காவற்துறை, வைத்திய கலாநிதி.நந்தகுமார் இன்று பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்தில் கொறொனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டபோது றியோ விற்பனை நிலைய ஊழியர்கள் உட்பட்ட வேறு சிலரால் கல்லுகளால் தாக்கப்பட்டுள்ளார் இதன்போது வைத்தியரின் நண்பரும் தாக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .இது தொடர்பில்...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 2 வாரத்திற்கு அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக இன்று முதல் பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. அந்தவகையில்,...
கொரோனா வைரஸ் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை அறிவதற்கு தொலைபேசி இலகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 011 30 90 502 மற்றும் 113 என்ற இலங்கங்களின் ஊடாக அழைத்து தகவல்களை பெற முடியுமென இராணுவ தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்றையதினம் தெரிவிக்கையில், “இத்தாலியிலிருந்து இன்று (நேற்று) வருகைதந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் கொரோனா தாக்கமாக இருக்கலாம் என்ற...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா...
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளுடன் நாடளாவிய ரீதியில் 29 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் இலங்கையில் உள்ள 15 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அப்பிரிவு, அவர்களில் 08 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இந்த விடயம் தொடர்பாக...
நாட்டில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சிவில் விமானம் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்தோடு மறு அறிவித்தல் வரும் வரை குறித்த தடை அமுலில் இருக்குமென சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் சந்தசிறி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று...
கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். அதன்படி நாளை 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை...
நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் பிற்பகல் 2 மணிக்கு வௌியிடப்படும் என கல்வி அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் இருவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவரும், சோமாவதி புனித தளத்துக்கு யாத்திரை சென்ற ஒருவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, குறித்த இருவரையும் அங்கொட...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையரின் உறவினர்களை கொழும்பில் அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அங்கொடையில் அமைந்துள்ள ஐ.டி.எச். வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் குடும்பத்தினரை வீட்டுக் காவலில் கண்காணிக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில்...
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையில் நடமாடியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...
All posts loaded
No more posts