- Thursday
- December 26th, 2024
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் மறுஅறிவித்தல் வரை அனைத்து ஆலய செயற்பாடுகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது என யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில், “22ஆம் திகதி ஞாயிறு தினத்தை உபவாச...
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் விசேட அறிவிப்பொன்று இன்று (சனிக்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “யாழ். மாவட்டத்தில் கோரோனா தொடர்பான பலதரப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் தெரிவித்துவருவது மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் தேவையற்ற பீதிகளையும் ஏற்படுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் தொற்றினை மாவட்டத்தில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் அரியாலையில்...
கொரோனா வைரஸால் மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், மேலும் நால்வருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மொத்தமாக ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வௌிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை 5 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டுள்ள நிலையில் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இலங்கையர்கள் எனவும், நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அவர்களை...
நாடு முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வர்த்தக நிலையங்கள், வணிக ஸ்தாபனங்கள், வங்கிககள் என அனைத்தும் பூட்டப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். இதனால், யாழ்ப்பாண நகரம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களும் அமைதியாக வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இருப்பினும், ஊரடங்குச் சட்டத்தை...
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் நேற்று மட்டும் 13 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என...
யாழ்.செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர்...
நாட்டில் வாழும் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நோயாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பில் அறியக்கிடைத்ததும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க...
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம்...
பலாலி மற்றும் இரணைமடு விமானப் படைத்தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருபவர்களை தங்க வைக்கும் வகையில் அவை அமைக்கப்படுவதாக விமானப் படை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படை முகாமில் அமைக்கப்படவுள்ளது என்று...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். முறையே கம்பஹாவில் 18 பேரும் கொழும்பில் 17 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குருநாகல் -04, களுத்துறை-04, இரத்தினபுரி -03, காலி -01, கேகாலை -01, மாத்தறை -01, மட்டக்களப்பு -01,...
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. இதற்கமைய...
கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இதனை கூறியுள்ளார். இந்த நிலைமை குறித்து தொடர்ந்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெளிவுப்படுத்தி வந்துள்ளது. நடைமுறையில் இருக்கும் சட்டம் போதுமானதாக இல்லை என்றால்,...
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகப்புப் பெற்றுக்கொள்ளவது என்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம். மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ்ஸின் பரம்பல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து, தேசிய அளவில் மக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, திருமண வைபவங்கள், குடும்ப நிகழ்வுகளை...
இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும்பொருட்டே இந்த...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேரதல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது என...
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (மார்ச் 18) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 50 பேர்) அதிகரித்துள்ளது. நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள்...
கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 862 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 862 பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு 190,873. இதேவேளை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கிட்டத்தட்ட 80,000 பேர்...
புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று(புதன்கிழமை) மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. புத்தளத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா...
Loading posts...
All posts loaded
No more posts