- Sunday
- November 24th, 2024
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர்...
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின் பல பகுதிகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட 447 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானங்களில், வாகனங்களில்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதபோகரின் வழிப்பாட்டில் வவுனியாவில் இருந்து கலந்துகொண்டவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையில் போதனையில் ஈடுபட்ட மதபோதகருக்கு கொரனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இருந்து குறித்த நிகழ்விற்கு சென்ற 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் நெளுக்குளத்தை சேர்ந்த ஒருவரும், புளியங்குளத்தை சேர்ந்த ஒருவருமாக இருவருக்கு...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் வாந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம். நோயாளிகள் தொடர்பான விடயங்கள் நாளாந்தம் பொது மக்களுக்கு அறிவிக்ப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ்...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும்...
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாரிய நெருக்கடியொன்றைத் தொற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்கள், மக்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்து, குறுகிய நேரக்காணொளிகளையும் எழுத்துமூலப் பதிவுகளையும் தமது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். அவ்வாறு...
கோரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த பாரதூரமான சுகாதார பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக உள்ள பிரதானமான வழி வைரஸிற்கு ஆட்படுவதை தவிர்ப்பதாகும். அலுவலகங்கள், கடைகள், பேருந்துகள்,...
வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கோரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த மதபோதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றவர்களை உடனடியா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விவரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர்...
சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மதப் போதகருடன் 150 தொடக்கம் 180 பேர் நெருக்கமான தொடர்பாடலைக் கொண்டிருந்துள்ளனர் என்று இராணுவத் தளபதியும் கோரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு...
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இனங்காணப்பட்டால் 3 வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கர்ப்பிணித்தாய்மாரின் எண்ணிக்கை குறைந்தளவாகக் காணப்பட்டாலும் அவர்கள் ஏனையவர்களை விட விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரிவினராகக் கருதப்படுவதாக விசேட வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கர்பிணிப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் வைத்தியர் கபில ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே இவ்வாறு கொரோனா (COVID -19) தொற்று உள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை...
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் சுவிஸ்சர்லாந்து போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 137 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாளை ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் போதும் அவர்கள் 137 பேரும் தமது தனிமைப்படுத்தல் வெளியேறாமல் தடுக்கவும் நடவடிக்கை...
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மூன்று நட்சத்திர விடுதிகள் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்படவுள்ளன. இதுகுறித்து, குறித்த நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சினமன்(Cinnamon), சிட்ரஸ்(Citrus), செரண்டிப் (Serendib) ஆகிய நட்சத்திர விடுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கான இடவசதியை வழங்குவதற்கு முன்வந்துள்ளன....
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இத்தொற்று ஏற்பட முன்னர் மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்கம் அறிவித்தல்களை வழங்கிவருகின்றது. அத்தோடு ஆயுர்வேத மருத்துவர்கள் சில மருந்து வகைளை பயன்படுத்தவதன் மூலம் இத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியுமென...
Loading posts...
All posts loaded
No more posts