நல்லூரில் எரிவாயு விநியோகத்தை நிறுத்திய பிரதேச செயலர்!! மக்கள் மத்தியில் குழப்பம்!!

நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின ஊடாக பங்கிட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனை அறிந்து பெருமளவான மக்கள்...

பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது!!

நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது. இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபாயைக் கடந்துள்ளது. இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 82 ரூபாயினால் அதிகரித்து 420...
Ad Widget

குரங்கு அம்மை நோய் குறித்து இலங்கையும் கவனம் செலுத்தவேண்டும்!!

உலகின் பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) தொடர்பில் இலங்கையும் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும் என ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். இன்று...

இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!! : ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – மஹேல

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்,...

விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை!! -கல்வி அமைச்சர்

பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன. எனவே நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு இடையூறின்றி பரீட்சைகளை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....

ஆசிரியர் அறைந்ததால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

9 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர் 3. கெஹலிய ரம்புக்வெல்ல...

அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை- பிரதமர்

அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார். அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் தேட வேண்டியுள்ளது....

பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் சாத்தியம்

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை கோதுமை மா மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை...

மே மாத இறுதிக்குள் நாடு மூடப்படும் அபாயம்!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்....