- Saturday
- November 23rd, 2024
நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு...
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி...
அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில் வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலைக்குள் புகுந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டுள்ளார். தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்....
வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றய தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா...
நேற்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. வளிச்சீராக்கிகள் (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ்...
லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் வியாழக்கிழமை ( ஜூன் 2) 414 இடங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி நாடளாவிய ரீதியில் இன்றையதினம் 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறைகளையுடைய 50 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன. கீழுள்ள லிங்கை கிளிக்...
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் அருகே வசித்த 9 வயதான பாத்திமா ஆய்ஷா அக்ரம் எனும் சிறுமியின் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 'பல்லி குட்டி' என்ற புனை பெயரால் அறியப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான 28 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற...
தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர்...
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்ததும், தரையிறக்கல் பணியினை தொடர்ந்து விநியோக நடவடிக்கை நாளை மறுதினம் முதல் முன்னெடுக்கப்படும். அத்துடன்...
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்கள் சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, யாழ். மாவட்ட செயலகம் பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளது. இப்பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை - மக்களுக்கு விநியோகிக்கும் முறை: ● கிராம அலுவலர் பிரிவுகளுக்கென...
இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் குறித்த குற்றச்சாட்டை...
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை முதலே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது. நேற்றையதினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன்...
கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார்....
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர். இந்த நிலையில்,...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இன்று (25) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக்...
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார். அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேல்...
Loading posts...
All posts loaded
No more posts