- Thursday
- January 2nd, 2025
பேருவளையில் இன்று (30) சிறியளவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் 3.7 ரிச்டர் அளவில் சிறியளவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை...
023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை...
புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனோஷியா மற்றும் கிழக்கு திமோர் அருகில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் அம்போன் தீவிலிருந்து 427 கிலோமீற்றர் தொலைவில் கடலடியில் 86.9 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. திமோரின்...
சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில்...
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும்...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம்...
இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார். வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக 112 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. இது இன்னும் சில...
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும்...
பல நாடுகளில் பரவலாகக் காணப்படும் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன்முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். காய்ச்சல், தோலில் கொப்பளங்கள், வீங்கிய...
பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது ப24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோலின் புதிய...
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை...
மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்யும் போது கவனமாக ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் நடைமுறையில்...
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸார்...
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வாறு...
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து...
இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts