- Sunday
- November 24th, 2024
தமிழ் மக்கள் வேதனையிலுள்ள நிலையில், இன அழிப்பிற்கு துணை போனவர்களுடன் இணைந்து அரசாங்கம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது என வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்ற (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று காலை செம்மணிப் புதைகுழியில் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட செம்மணி மண்ணில் இன்று காலை 9.30 மணியளவில் கூடிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன், பா.கஜதீபன் மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர்...
ஈழத்தின் மானிடப் பேரவலம் நடந்தேறிய நாள்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஆறாத் துயர் நிறைந்த நினைவேந்தல் வாரத்தை, ஒற்றுமையாகவும் – வன்முறைகளைத் தவிர்த்தும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின் போது, மூன்று லட்சம் மிகக் குறுகிய வெளிக்குள் முடக்கப்பட்டு, உணவு...
மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் திகதி இடம்பெற்ற தமிழினப்...
முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும்...
அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18...
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ கலந்துகொண்டார். கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா...
முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்,...
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை, கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில்...
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மே 18 நாளான இன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்தல் விடுத்தன. இதனையடுத்து, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, தமது தேசியக்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், அனைத்துப் பீட மாணவர்கள், கல்விசார ஊழியர்கள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் வடக்கில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தமுடியும். இந்தச் செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையின் எந்தவொரு தலையீடும் இருக்காது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் அஞ்சலி செலுத்த முடிந்தாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தோ அல்லது புலித் தலைவர்களின் படங்களை வைத்து...
சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது. வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள்....
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு...
முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள்...
"போரில் உயிர்ப்பலியானோருக்கு மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக இன்று மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம். எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டு தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே...
யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு...
Loading posts...
All posts loaded
No more posts