- Sunday
- November 24th, 2024
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும்,...
சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மாலை அனுஷ்டிக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர்கள் காணப்படக் கூடாது என்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய...
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டதாக நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நினைவுக்கற்களை...
வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூறும் வகையில், இன்று வியாழக்கிழமை (18) முழுவதும், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தால் காரணமாக, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ள போதிலும், அரச நிறுவனங்கள்...
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் பங்குகொண்டு, சுடரேற்றி, போரில் உயிரிழந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்ததுடன் மூன்று நிமிட அக வணக்கமும் செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து...
முல்லைத்தீவில் இன்று மாலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த தீர்ப்பிற்கு எதிராக இலங்கையின் சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அணிதிரள வேண்டுமென உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களது நினைவாக சிலைகளை அமைத்து, கல்வெட்டுக்களை பதித்து இன்று மாலை சிவில் அமைப்புகள்...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழர் தாயத்தில் மட்டுமன்றி தமிழ் மக்கள் விரவி வாழும் தேசமெங்கும் இன்று (வியாழக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ”எங்கள் பெருமைமிகு...
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு, இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு...
பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இன்றைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும்...
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும்....
“தென்னிலங்கை அரசியல்வாதிகள் போல பணத்திற்காக நாங்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். நாங்கள் எங்களுடைய மக்களின் உரிமைக்காக செயற்படுபவர்கள்” என வட.மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்ற (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றன. இதன்போது கருத்துத்...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையின் கீழ், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளே, வெள்ளை வானுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதால், இராணுவம், கடற்படை, வான்படை அதன் கீழ் இயங்கும் ஊர்காவற்படை ஆகியவற்றால்...
தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது. நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள்...
மே 18 நினைவேந்தல் நிகழ்வானது இன்று திருகோணமலை நகரின் கடற்கரையில் அமைந்திருக்கும் காந்திசிலைக்கு முன்னாள் மதியம் 1.45க்கு வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தீபம் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்...
சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால்...
எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலியை அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஸ்டிக்கப்படவிருக்கின்றதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு...
இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... எதிர்வரும் மே 18ஆம் நாள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 8ஆவது ஆண்டு நினைவுநாளாகும். இவ் இனவழிப்பு நாளை நினைவு கூர...
ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் வரமராட்சி, பொலிகண்டி- ஊறணி பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மே 12ஆம் திகதிமுதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால்...
Loading posts...
All posts loaded
No more posts