- Friday
- December 27th, 2024
தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் செம்மணிப் படுகொலை புதைகுழி இடத்தில் இன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது. மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் கடைப்பிடுக்கப்படுகிறது. இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது நாளான இன்று காலை செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....
தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பாதீர்கள். எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் எனத் தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று வியாழக்கிழமை(10) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தமிழீழ விடுதலைப் புலிகள்...
வட. மாகாண சபை தமது கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வை புறக்கணிப்போம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வடக்கு- கிழக்கு தாயக மக்கள்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் பொது...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கூட்டத்துக்கான பொது அழைப்பை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்தார்....
முள்ளிவாய்க்காலில் நடைபெறும் தமிழர் இனவழிப்பு நினைவுதினத்தை வடக்கு மாகாணசபை தாமே நடத்துவோமென அறிவித்துள்ளமையானது மனவேதனையைத் தருவதாக என யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி...
யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன....
பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை, அவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைக்கழக...
“முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என்பதுடன், தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதுக்கும் அனுமதிக்க முடியாது” என யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்....
தமிழினத்தின் மறுக்கப்படும் நீதிக் காகவும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகத்திற்காகவும் முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர அனைவரும் அணிதிரள வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழகத் தின் அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமேனனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...
இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்...
நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தரமான, சமத்துவம் மிக்க சமாதானம் ஏற்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் யுத்தத்திற்கான காரணம் என்ன? அந்த யுத்தத்தின்...
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு நேற்ற காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் இறுதியுத்தம் நடைபெற்ற மாணிக்கபுரம் வாவிக் கரையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். போர்க்காலத்தில் சிறீலங்கா அரசினால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts