- Wednesday
- December 25th, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பொது மக்கள் மட்டுமன்றி வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று பருகியமை விசேட அம்சமாகக் கருதப்படுகிறது....
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில; நேற்று புதன்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு...
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த கண்டன அறிக்கையில், இரவில்...
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும்...
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை - 04 மணியளவில் சிவில் -...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போதுது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம், பொதுமக்கள்...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் பலப்பக்கங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்.இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாகை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் போரின் சுவடுகளை தாங்கிய முள்ளிவாய்க்காலில் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்த்தை முன்னிட்டு இன்று, அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி...
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10.05.2023 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன்போது ஏ-9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும்...
தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ஆம் திகதி தொடங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும்...
யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார்த்தின் முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினர் சிவில் மற்றும் இராணுவ உடைகளுடன் மாணவர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தல்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர். குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான நடத்தப்பட்டது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களும் சுடர் ஏற்றி அஞ்சலித்தனர். தமிழ் மக்கள் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக...
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி...
Loading posts...
All posts loaded
No more posts