- Friday
- December 27th, 2024
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி...
மாவீரர் தினமான கடந்த 27ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண ஊழியர்கள் இருவர், விளக்கேற்றியமை தொடர்பில் அந்த இரு ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி இரண்டு ஊழியர்களும், யாழ்ப்பாண வளாகத்துக்குள் விளக்கேற்றியதாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது சகோதரர்கள் உயிர்நீர்த்ததாகவும் அதனால் தான் விளக்கேற்றியதாகவும் அதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும்...
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையில் பரமேஸ்வரா ஆலய முன்றலில் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் அவர் மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றதோடு, இதில் உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கில்...
வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. அரசியலமைப்பின் படி, நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு அமைப்புத் தொடர்பான...
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்ட இந்த உரிமையை இராணுவமும், பொலிஸாரும் தடுக்க முயற்சிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின்...
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் உரிமைக்காகக் களமாடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி...
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகும். எனவே, பொது இடங்களில் மரணித்த புலிகளை நினைவுகூருவது, புலிகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானதாகும். இது தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் இருக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். "வடக்கு, கிழக்குப்...
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள், நாளை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி...
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விடுதலை புலிகளின் புகழ்பாடும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகளில் மறவர் படையின் புனித நாள், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம், மாவீரர் நாள் விளக்கு எரியும் போன்ற விடுதலை புலிகளின் புகழ்பாடும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை ஒட்டியதாக யாழ். புத்தூர், மீசாலை சந்தி பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் கூறியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். மாவீரர் தினத்தை நினைவுகூறும் வகையில் விடுதலைப்புலிகளை ஆதரித்த துண்டுபிரசுரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரசிங்கம் சுலக்ஸன்...
எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். (more…)
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், இன்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்கள், வீடுகள், ஆலயங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் வழிபட்டுள்ளனர். கடந்த வாரமே யாழ்.பல்கலைக் கழகம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் இராணுவ கெடுபிடிகளையம் மீறி பல்கலை வளாகத்தில் மாணவர் பொது அறையில் ஈகைச்...
மாவீரர் தினமாக இன்று வியாழக்கிழமை வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு வரணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்னற உறுப்பினர்கள், வடக்குமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தனர். இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர், எமக்காகப் போராடியவர்களின் நினைவு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளான இன்று அது கொண்டாடப்படலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு முழுவதும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போர்க்காலங்கள் போல் வீதிகள் ஒழுங்களைகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு வீதிகளில் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம், நல்லூர், யாழ்.போதனாவைத்தியசாலை...
மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?' எனக்கேட்டு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (25) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
பாடசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
மாவீரர் தினமான நாளை வியாழக்கிழமை இலங்கை இராணுவத்தின் கபடி அணிக்கும் இந்திய இராணுவத்தின் கபடி அணிக்கும் இடையில் காட்சி ஆட்டம் ஒன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. (more…)
இன்று புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியாகும். இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விசேட பூசைகள் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம். (more…)
Loading posts...
All posts loaded
No more posts