- Friday
- December 27th, 2024
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பபட்டுள்ளனர். மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த பேராளிகளை கிளிநொச்சி பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். கிளிநொச்சி...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவீரர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த நிறைவிற்கு பின்னர் சிதைக்கப்பட்ட குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினர் வசமிருந்த கனகபுரம்...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் எதனையும் செய்ய முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இராணுவத்தைச் சாராது எனவும் அது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்தைச் சாரும் என...
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை இலக்குவைத்தே தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் மாவீரர் தினத்தை அனுட்டிக்க சிறீலங்கா அரசாங்கம் அனுமதியளித்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும் சிறீலங்கா அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுட்டிக்க...
சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தையும் அனுட்டிக்கமுடியும் எனவும் அதில் எந்தவிதத் தவறுமில்லையெனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக்...
மாவீரர் தினம் அனுஷ்டிப்பு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து உயிரிழந்தவர்களை, அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாவீரர் தினத்தில் பொது இடங்களில் ஒன்று கூடி, நினைவு கூருவதற்கு கடந்த எட்டு வருடங்களாக...
மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்...
உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக, அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை மாவீரர் தின நினைவேந்தல்களை நடத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அரச தரப்பில்...
கிளிநொச்சி முழங்காவிலில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ள அவர்களும் கலந்துகொண்ட இந்தத் துப்பரவுப் பணியில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவும் செய்யும் பணிகள் நேற்று காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முழங்காவில் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று 12.00 மணியளவில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களினால் மாவீரர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழினத்தின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீரர்களின் நினைவுநாள்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மாவீரர் நாள் நவம்பர் 27 யாழ் பல்கலைக்கழக சமுகம், மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக...
“வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவது தவறல்ல. ஆனால், அவர்களுக்கு, ‘மாவீரர்’ என்ற நாமத்தைச் சூட்டுவது தொடர்பில், மக்களே சிந்தித்துத் தீர்மானமெடுக்க வேண்டும்” என்று, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். “யுத்தத்தில் உயிரிழந்தவர்ளுக்கு பூஜைகள் செய்து, அவர்களை நினைவு கூருங்கள்....
போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனஅரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தினத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள்...
கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதற்கென...
'எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்....
Loading posts...
All posts loaded
No more posts