- Thursday
- December 26th, 2024
யாழ்ப்பாணம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதவான் அ.ஜூட்சன் தடையுத்தரவு வழங்கியுள்ளார். சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடையுத்தரவு வழங்க வேண்டுமென கோரி ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றில் மனு தாக்கல் ஒன்றை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாளை நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலைமையிலையே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக்...
தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது. இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த...
யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்த மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பனவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்...
வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை...
மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின்...
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து...
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நியாயமான ஒரு தீர்வு கிடைக்காத நிலையை முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்திவந்ததனாலேயே, போராடவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள். அத்துடன் அந்தப் பிள்ளைகளை விதைத்த இடத்தில் அவர்களுடைய உறவுகள்...
யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனையடுத்து அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை, கடந்த வருடத்தைப்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும்...
உலகெங்கும் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில்,...
”அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் தேர்தல் தேவைக்காக மாவீரர் தினத்தை பயன்படுத்தக் கூடாது. அதன் புனிதத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” என முன்னாள் போராளியான காக்கா அண்ணன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன. அதேபோல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யபட்டு வருவதை அவதானிக்க...
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதென, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்...
விடுதலைப் போரில் விடுதலை புலிகள் சாா்பில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர்...
யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் வகையிலான தீர்மானமொன்று, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று(15) ஆரம்பித்து எதிர்வரும் 26ஆம் நாள் வரை பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுகூர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாளிலிருந்து 26ஆம் நாள் வரையிலான 12 நாட்களும் நீராகாரம் எதுவுமின்றி தன்னை ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நாள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு...
மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பிமலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலும் இல்லம் நேற்று (திங்கட்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பிமலையிலுள்ள சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து இந்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்...
Loading posts...
All posts loaded
No more posts