- Sunday
- December 29th, 2024
யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து...
சந்தேகநபர்கள் தாங்கள் எதனையும் தெரிவிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்குள் வைத்து தெரிவிக்க முடியும். அதனை விடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியில் சிறைச்சாலை வாகனங்களுக்குள் இருந்து கத்துவதால் எந்தப் பிரயோனசனமும் இல்லை' என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறினார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்தார். குறித்த வழக்கின்...
வித்தியா கொலை சந்தேக நபர்கள் மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செளியன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் இன்று 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி...
வித்தியா கொலை வழக்கில் 13 ஆவது நபரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தனிமையில் நீதிவான் வை.எம்.எம்.றியால் முன்பாக நேற்று முற்படுத்தினர். புங்குடுதீவில் மாணவி வித்தியா கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஒரு வருடம் கழிகின்ற நிலையில் 13 ஆவது நபர் ஒருவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். புங்குடுதீவை...
ஊடகங்கள் சில எனது மனைவிக்கும் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிக்கும் தொடர்பு என செய்திகள் வெளியிட்டு இருந்தன. இதனால் மனைவி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் நீதவானிடம் முறையிட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றய...
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக நேற்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மாணவியின்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (09) ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 9 சந்தேகநபர்களும்...
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் யாழ்.மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு 11ஆவது சந்தேகநபர் துன்புறுத்தப்படவில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி கொலைச் சம்பவத்தில் தனது மகனான உதயசூரியன் சுரேஸ்கரனை (11 ஆவது சந்தேகநபர்) அரச தரப்புச் சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துகின்றனர் என சந்தேகநபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள்...
நீதிமன்ற செயற்பாடுகளை விளையாட்டுத்தனமாக எடுக்க வேண்டாம். பொய் சொல்லவும் வேண்டாம். நான் மன்றில் தெரிவிக்காத தகவல்களை வெளியில் எவ்வாறு வெளியிடுவீர்கள்?' இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வு பொலிஸாரை கடுமையாக எச்சரிக்கை செய்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் 10 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு நேற்று திங்கட்கிழமை (25) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய 11வது மற்றும் 12வது சந்தேக நபர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 12வது சந்தேக நபரான ரவீந்திரன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கினார். இதன்போது, வித்தியா கொலை சம்பந்தமாக தனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும், எல்லோருக்கும் தெரிந்த விடயமே தனக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். புங்குடுதீவு...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு 'ஜின்ரெக்' நிறுவன அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி வித்தயா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நெருங்குகிறபோதும் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை....
புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது. வடக்கு, கிழக்கையே கொதிக்க வைத்த வித்தியா விவகாரம் இப்பொழுது மெது மெதுவாக அடங்கிச் செல்கிறது. வித்தியாவிற்கான எழுச்சியில் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கை கொலையாளிகளை அடையாளம்...
புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் என வித்தியாவின் தாய் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரியுள்ளார். ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த உறுதியின்படி ஞாயிறன்று வவுனியாவில் அவர்களது குடும்பத்திற்கு என வீடு ஒன்று வழங்கப்பட்டது. இதனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவான் விஜேவர்தன வழங்கினார். வவுனியா கொக்குவெளி என்ற இடத்தில் இராணுவத்தினரின்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பன்னிரண்டாவதகாவும் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (01) முன்னிலைப்படுத்தப்பட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளுடன் இணைக்காது மேலும் ஒருவர் பதினோராவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிரிதொரு தினத்தில் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது....
ட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் மரணத்தின் பின்னர் புங்குதீவில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா படுகொலை வழக்கு நேற்று நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ் வழக்கு தொடர்பான...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கதைக்க...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனை அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துவதாக 11ஆவது சந்தேகநபரின் தாயார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். இந்தத் தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உறுதிப்படுத்தினார். புங்குடுதீவு மாணவி...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில்...
Loading posts...
All posts loaded
No more posts