- Friday
- January 3rd, 2025
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கேடுகளை இரும்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, மேற்படி வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில்...
புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே இடம்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி புங்குடுதீவு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி புங்குடுதீவு கந்தசாமி கோவிலடியில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (05) தெரிவித்தார். இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் புதிய வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸ்நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபி என்பவர், தம்மை பழிவாங்கும் நோக்குடன்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது என, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று (22) தெரிவித்தார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார். இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார். அரச...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பன்னிரன்டு பேரின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்...
வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கிருக்கும் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது ஆதிகத்தினைச் செலுத்தி ஏனைய...
யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும்26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து குறித்த 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்...
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில்...
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில், புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடம் பொலிஸார், நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்தனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைக்கு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது கடந்த...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றயதினம் 12 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்டனர். இவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 28ம்திகதி வரை நீடிப்பதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம். றியால் உத்தரவிட்டார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். இந்த சந்தேக...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா பாலியல் வன்புனர்வின் பின் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் பரீசிலனையில் உள்ள நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. அதேவேளை முதலில் கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களதும் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று...
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts