- Saturday
- November 2nd, 2024
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு, நீதாய விளக்கம் முன்பான (ட்ரயல் அட் பார்) ஐந்தாம் நாள் சாட்சிப் பதிவுகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்...
அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார். வித்தியா கொலை வழக்கு தற்போது ட்ரயல் அட் பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், நேற்றய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது. அதன் போது...
புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் 2 ஆவது நாளாக சாட்சிப் பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மிக முக்கிய சட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரது சாட்சிப்பதிவின் போது மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இம் முக்கிய 5...
எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு சைக்கிளில் தான் செல்வாள் வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்ல 1 தொடக்கம் 1 அரை மணித்தியாலம் தேவைப்படும் பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா) வித்தியாவை பாடசாலைக்கு அழைத்துச் செல்வான் சிலவேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் கூட படிக்கும் சக பிள்ளைகளுடனேயே வித்தியா செல்வாள். எனது...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார். வழக்கின் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று...
வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமனறத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய வவுனியா மேல்...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (12) திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாகி 9 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை தீர்பாயத்தில்...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள தமிழ்மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை நேற்று நடாத்தியுள்ளது.
இதன் முதல் அமைர்வின் போது இந்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில்...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய 'ட்ரயல் அட்பார்' முறையில் இடம்பெறவுள்ளது. குறித்த மாணவி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு, சட்டமா அதிபரால், ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிரான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடற்படையுடனும் இராணுவத்துடனும் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வித்தியாவின் கொலையில் கடற்படையினருக்கு பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், சிறிதரன்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி வழக்கின் விசாரணைகள் கொழும்பிற்கு மாற்றப்படுவதற்கு...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு கோரி மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள்...
இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி போராட்டம் இன்று மாலைவரை முன்னெடுக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும்’, ‘மாணவியின் நீதி...
Loading posts...
All posts loaded
No more posts