- Saturday
- November 2nd, 2024
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் குறித்த 7 கைதிகளையும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் சென்றுள்ளனர். தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி குறித்த 7 குற்றவாளிகளும் போகம்பர சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றுள்ளனர். வித்தியா...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்ட விதத்தை நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இக் குற்றத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இச் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதென நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சுவிஸ்குமாரை தப்பிக்க வைப்பதற்கு...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள்...
வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த இரு...
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கின் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 3 லட்சம் பெறுமதியான காசுப் பிணையிலும்,...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிரான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்ட வில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய “ட்ரயலட் பார்” முறையில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொகுப்புரைக்காக இன்று செவ்வாய்கிழமை நீதாயவிளக்கம் ( ரயல் அட் பார் ) கூடவுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க, மிகவும் பிரபல்யமான ஒருவர் செயற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்ட அசாத் சாலி, உண்மையான குற்றவாளியை கைதுசெய்ய அரசாங்கம்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன் குறித்து பல முக்கிய விடயங்களை நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகக் கீறல்களுடன் ஒருவர் வெளியில் உள்ளாரென்றும், சட்டவைத்திய அதிகாரிகளை மீள அழைத்து சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு வழக்குத் தொடுநர் ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில், எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. இதன்போது, ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வித்தியா கொலை வழக்கின், வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிப் பதிவுகள் கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த வாக்குமூலத்தினை அடுத்த வழக்குத் தவணைக்குள் நீதமன்றிற்கு வழங்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
புங்குடுதீவை சேர்ந்த மாணவியான சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகளை பயன்படுத்தி ஆபாச காணொளி தயாரித்துள்ளார்.சுமார் 5 காணொளிகள் அவ்வாறு...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வித்தியா கொலை வழங்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்துறையில் பொறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts