- Saturday
- December 28th, 2024
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப்...
புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திர குமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கில் இருந்தும் பூபாலசிங்கம் இந்திர குமார் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மாதங்கள்...
மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த...
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை)...
மரண தண்டனையை நிறைவேற்றுவதாயின் முதலில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுட்டவர்களுக்கே அதனை நிறைவேற்ற வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள்...
யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி, மாணவி வித்தியாவின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை, அக்குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட...
வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இந்த...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள், உயர் நீதிமன்றில் நேற்று (13) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர்...
வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கின் முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் இன்று கட்டளையிட்டார். லலித்...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) வாக்குமூலம் பெற்றுள்ளனர். வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிரான வழக்கு தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம்...
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை சந்தித்தார். நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு வருகை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மாணவி...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் நேற்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது....
புங்குடுதீவில் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாருக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதேபோன்ற கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கான மிகஉயர்வான முறையில் பங்களிப்பு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவுபெற குறைந்தது 5 ஆண்டுகள் எடுக்கும் என சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார். 5 குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை முனவைத்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “வித்தியா...
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனையானது வரலாற்று ரீதியில் மதிக்கப்பட வேண்டிய ஓர் தீர்ப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புங்குடுதீவு மாணவி...
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள்...
புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts