பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு

யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் தொடர்பில்...

வடக்கில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது!

வடக்கில் கடற்மையாற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக...
Ad Widget

பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பு சாதாரணமானதே! பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச்...

யாழ். பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டமை பாரதூரமானது: மாவை சேனாதிராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்ஷன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் காங்கேசன்துறை வீதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டிருப்பதான...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்து, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்டு, பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு...

வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவே வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது என்றுசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர்மேலும் தெரிவிக்கையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்த...

பல்கலைக்கழக மாணவர்கள் கொலை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்...

பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் 5 பொலிசார் கைது.சி ஐ டி விசாரணை!

யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் குற்றப்புலனாய்வுப்பிரிவின்  விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்

பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம்: வைத்தியசாலைக்குச் சென்றார் மாவை

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, உடற்கூற்று பரிசோதனை இடம்பெறும் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற தகவலினால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்தனர். இதனையடுத்து,...

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...

கொக்குவில் விபத்தில் யாழ் .பல்கலை மாணவர்கள் இருவர் பலி

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே...