- Saturday
- November 23rd, 2024
யாழ்.பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக சுயாதீன விசாரணைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந் நடவடிக்கையின் பின்னர் மேலும் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்குமென குறிப்பிட்டுள்ளார். யாழ்.மாணவர்களின் மரணம் தொடர்பில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென, நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்...
யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதனைக் கண்ணால் கண்ட மாணவன் கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை...
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவனான விஜயகுமார் சுலக்ஷனின் வீட்டுக்கு அருகில் நின்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊரார் மீதும் இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை ஆலம்பிட்டி சந்திக்கு அருகில் செவ்வாய் இரவு 7 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், பொலிஸாரை நோக்கி மிகவேகமாகச் செலுத்தப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் வானத்தைநோக்கி சுட்டபோது ஒரு மாணவன் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் மூலம் தெரியவந்திருப்பதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்....
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில், அண்மையில் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக உயிரிழக்க நேர்ந்த சம்பவத்துக்கு, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கடும் கண்டனத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாணவர்கள் இருவரும் உண்மையில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கும் பட்சத்தில், துப்பாக்கி பிரயோகமானது பின்னிருக்கையில் இருந்தவரை...
கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இரு பல்கலைக்கழகமாணவர்களின் அநியாயமானஅகாலமரணம் ஆழ்ந்ததுயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது....
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அங்கு, கொள்ளைச் சம்பவங்களோ, குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களே அல்லது உயிரச்சுறுத்தல் போன்ற துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்...
கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டுவரும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். மாணவர்கள் கொலை தொடர்பாக இரண்டுபேர் கொண்ட குழுவொன்றை தேசிய காவல்துறை ஆணைக்குழு நியமித்துள்ளது....
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் (25 ) வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும்...
யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும்...
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலக்காகி உயிரிழந்த, யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்ஸனின் இறுதிச்சடங்கு, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு, மாணவனுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் உரையையடுத்து, மாணவனின் பூதவுடல், உடுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து இன்று பிற்பகல் 4 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு நீதிக்காக குரல் எழுப்புமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை வடக்கில் நாளைய...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களது மரணத்திற்கு நீதி கோரியும் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது . கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த பேரணி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது....
போருக்கு பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப் பல்கலைகழக சமூகத்தையும் அனைத்து தமிழ் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று சம்பவத்துடன் தொடர்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்பு நிலை மீளுருவாக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆரம்பத்தில் பொலிஸார் இந்த கொலைகளை விபத்தாக காட்ட முனைந்தமை...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகைப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனால் இன்று காலை எட்டு மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை, யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றின் பணிகள் முடக்கப்பட்டிருந்ததுடன், ஏ9 வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. மிகவும்...
கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று பிற்பகல் மாணவனது இல்லத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளானோர்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவடைந்துள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயத்திடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றும் மாணவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச தரப்பு சூழ்ச்சியாளர்களின் செயற்பாடு என யாழ்ப்பாணத்தில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். யாழில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சிவில் உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவங்கள் 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர்...
Loading posts...
All posts loaded
No more posts