யாழ். மாணவர்கள் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாம் இந்த விடயத்தை நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கை கொழும்பிற்கு மாற்ற சுமந்திரன் ஆட்சேபனை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கினை கொழும்பிற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ள நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக மாணவர்கள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் படுகொலை வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Ad Widget

யாழ் பல்கலை மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு

இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்...

யாழ் பல்கைலைக்கழக மாணவர் கொலை வழக்கை இடமாற்ற சட்ட மா அதிபர் எதிர்ப்பு

அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை...

 பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கிச் சூடு :5 பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில்...

யாழில் ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்...

மாணவர்கள் இருவர் படுகொலை : குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சவீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதன்போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கு...

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை ; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்தமை தொடர்பில்...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை; ஐந்து பொலிஸாரும் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர்...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸாரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை வழக்கில் ஆயுதம் எடுக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான்...

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம்...

வீடு வேண்டாம் நீதி வேண்டும்! சுலக்சனின் தந்தை!

கடந்த மாதம் 20 திகதி  காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் பெற்றோர், பல்கலை மாணவர்கள். உபவேந்தர் மற்றும் பல்கலை விரிவுரையாளர்களை ஆகியோரை சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டிஎம் சுவாமிநாதன்  இன்று (21)சந்தித்துள்ளார். யாழ் பல்கலைகழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது...

மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டு படுகொலைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸார் ஐவரின் விளக்கமறியலும் யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் இன்று வெள்ளிக்கிழமை நீடிக்கப்பட்டது.

மாணவன் சுலக்ஷனின் நினைவாக சுன்னாகத்தில் பேரூந்து தரிப்பிடம்

அண்மையில் யாழில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்ஷனின் நினைவாக, பேரூந்து தரிப்பிடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று (புதன்கிழமை) நாட்டிவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைக்கப்படவுள்ள குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாட்டிவைத்தார். இந்நிகழ்வில், வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் தலைவர் பிரகாஸ், வலிதெற்கு பிரதேச சபை...

யாழ் மாணவர்களின் கொலையை நியாயப்படுத்தவே ஆவா குழுவின் கைது : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழில் பதற்றமான ஒரு நிலைமை உள்ளதாகவும், அங்கு ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக காண்பிக்கவும், இந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே ஆவா குழு என்று கூறி கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

கடந்த மாதம் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோருக்கு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் அஞ்சலி நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) நண்பகல் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. உயிரிழந்த மாணவர்களுக்கு இதன்போது மலரஞ்சலி இடம்பெற்றதோடு, மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி...

கஜன், சுலக்ஸன் வீட்டுக்குச் சென்றார் சம்பந்தன்

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களின் வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.

‘சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்’

கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts