வியாபாரிமூலையில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

பருத்தித்துறை, வியாபாரிமூலை கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அருகிலுள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இக்கிராமத்துக்கு பின் பகுதியில் சிறு பயிர்ச்செய்கை செய்கின்ற விவசாய...

மூழ்கிய படகு மீட்டு தரப்படும் – மாவை

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் மீண்டும் கரையொதுங்கிய மீனவர்களின் மூழ்கிய படகு மற்றும் வலைகளை மீட்டுக்கொடுப்பதுடன், அந்த மீனவர்கள் தொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம்...
Ad Widget

வடமராட்சி வடக்கில் 3,790 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி வடக்கு பகுதியைச் சேர்ந்த 1,118 குடும்பங்களைச் சேர்ந்த 3,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ரி.ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களில் 255 குடும்பங்களை சேர்ந்த 938 பேரை செம்மின், பொலிகண்டி, உதயமலர், திருமால்...

பொலிகண்டி நலன்புரிமுகாம் மக்கள் இடப்பெயர்வு

பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி முகாமில் உள்ள 69 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது. மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் தங்கியுள்ளார்கள்....

காணாமல் போன மீனவர்கள் எண்மர் கரைசேர்ந்தனர்

பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை (29) காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர். படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர். இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக மீனவர்களின்...

மூன்று மீனவர்களை காணவில்லை

பருத்தித்துறை கடலுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லையென மீனவரின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். (more…)