- Wednesday
- January 22nd, 2025
இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு நேற்று நல்லூரில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை...
தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை.... தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு யாழ் மாவட்டம் 2017 புரட்டாதி 24 தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய அரசிடம் நீதி கோரி காந்திய வழியில் நீராகாரம் அருந்தாது தன்னுடலை மெழுகாய் உருக்கி...
தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்... தியாகி திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில்...
தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்கும் பணி யாழ். மாநகரசபையிடம் நேற்றய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடமாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில், திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள காணி மாநகரசபையால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட காணி. அன்று எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அப்பகுதியில் அமைத்திருந்தோம். ஆனால் தற்போது காணி உரிமையாளர்களின் எதிர்ப்பு இல்லை அதை...
தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸடிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் ரயர்கள் போடப்பட்டு தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும்...
தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். மேற்படி நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் காலை 10.10 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கடந்த 23...