எழுக தமிழோடு இணைய பெண்கள் அமைப்புக்கள் முன்வரவில்லை

எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்கு மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்காகவே எழுக தமிழ்

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றி உரையின் முழு வடிவம்.. ´எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!´ என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும்...
Ad Widget

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...

எழுக தமிழ் பிற்போடப்பட்டது

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்...

தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு...

எழுக தமிழுக்கு அணிதிரளுமாறு அறைகூவல்!

வடக்குக் கிழக்கு மக்களின் அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்திக் கூற எதிர்வரும் 21ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வசந்தராசா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக...

கிழக்கு ‘எழுக தமிழ்!’ பேரணிக்கு ஒத்துழைப்பு தாரீர்!!

தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை - 2016-12-20 அவசர வேண்டுகோள்: பிரிக்கப்படாத தமிழ் தேசத்துக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தும் கிழக்கு 'எழுக தமிழ்!' பேரணிக்கு ஒத்துழைப்பு தாரீர்!! அன்புடையீர்: தமிழ் தேசத்தின் ஏகோபித்த அரசியல் அபிலாசையினைப் பிரதிபலித்த முதலாவது 'எழுக தமிழ்!' அரசியற் பேரணி, கடந்த செப்ரெம்பர் 24ஆம் திகதி வடக்கில் – யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக...

பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தி: வடமாகண முதலமைச்சர் கெளரவ‌ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை

குருர் ப்ரம்மா……………. எனதினிய இணைத்தலைவர் டாக்டர் இலக்ஷ்மன் அவர்களே, சமயப் பெரியார்களே, எம்மோடு இணைந்திருக்கும் உறுப்பின சகோதர சகோதரிகளே, எல்லோருக்கும் வணக்கம். பல பிரச்சனைகள் மத்தியிலும் எமது பேரவையின் ஓராண்டுப் பூர்த்திப் பெருங்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று கொழும்பில் இருப்பதாகவே இருந்தது. சென்றைய வார வடமாகாண சபைக் கூட்டத்தை இன்றைய வாரம்...

பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இடித்துரைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டுவிடும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இதற்கு இடமளிக்க முடியாதென்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பில் அரசாங்கத்திற்கு இடித்துரைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்.நூலக மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ஆற்றிய...

தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தி! பேரவைக்கூட்டத்தில் இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் ஆற்றிய உரை

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் (19-12-2016) , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக...

தமிழ் மக்கள் பேரவையின் இரங்கல் செய்தி

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கவலையடைகிறது. தமது முதல்வரை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரில் ஈழத்தமிழர்கள் சார்பில் தமிழ் மக்கள் பேரவை தனது இரங்கல்களை தெரிவிக்கின்றதோடு உங்களின் துயரையும் பகிர்ந்து கொள்கினறோம். அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் சார்பில் ஆற்றிய காத்திரமான பங்களிப்புகள்...

வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள்.- விக்கினேஸ்வரன்

'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்' என்ற தொனிப்பொருளில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் உள்ளது. இதனால் தான் வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள்.   சொந்த காணியில்...

தமிழ் மக்கள் பேரவையின் கொழும்பு ஊடகவியலாளர் மாநாடு(Video)

இன்று(22) கொழும்பில் நடைபெற்ற  வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின்  பத்திரிகையாளர் மாநாட்டில் நடந்தது என்ன? https://www.facebook.com/virakesari/videos/10158046197130019/ நன்றி வீரகேசரி இணையம்

வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாட்டில் லக்ஸ்மன் அவர்களின் உரை

இன்று(22) கொழும்பில் நடைபெற்ற  வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின்  பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன் அவர்களின் உரை வருமாறு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில், பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அதன் செயற்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக நாம் இங்கு...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்படமுடியாது

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இந்த கொலைகள் தொடர்பில் கடுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன், நீதியான விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ்...

“எழுக தமிழ்” ஒரு வரலாற்றுப் பதிவு! : தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள்...

‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக...

அனைவரும் முற்றவெளி நோக்கி திரண்டு வாருங்கள்!!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (24-09-2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களைப் பூட்டி பேரணிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு தமிழ் மக்கள் பேரவையினரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

எழுக தமிழ்! : தமிழ் மக்கள் பேரவை

தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !! வடக்கு...

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணைத்தலைவர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் கூடவுள்ளது. வட கிழக்கு இணைந்த, சுயாட்சியடிப்படையிலான ஒரு சமஷ்டி முறைத்தீர்வு தமிழ்த்தலைமைகளால் உறுதியளித்தபடி 2016 ஆம் ஆண்டிற்குள் வருவதற்கான எந்த ஒரு அடிப்படையும் அற்ற ஒரு வெறுமை நிலையில், உள்ளக விசாரணையில்...
Loading posts...

All posts loaded

No more posts