- Wednesday
- January 8th, 2025
தமிழ் மக்கள் பேரவை தற்போதையநிலையில் மக்கள் இயக்கமாகவே செயற்படும் என அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டுவருகிறது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை. தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை, தமிழரசுக் கட்சி தனித்து எடுப்பதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கி.தேவராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற...
புதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, 'தீர்வு' இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும் எனத் தமிழ்மக்கள் பேரவை...
அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில்...
நேற்று முன்தினம் {05/09/17} யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் " எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்வெளியிடப்பட்ட பிரகடனம். பிரகடனம் தமிழ் மக்கள் பேரவை 05/09/17 1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய...
‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘ தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும். செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம் தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக...
முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு,எதிர்ப்புதெரிவித்தும் ,முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் நேற்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கிறது. காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய...
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் - வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி காலம் : இன்று...
தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது. நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள்...
பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை...
நேற்று , 24/04/17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை.. தமிழர்களின் வரலாற்றுரீதியான தாயக நிலத்தின் தலைமை நகரமானதும், இந்த இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியற் போட்டியின் ஒரு கேந்திரமுக்கியத்துவம் உடைய ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்ததுமான இந்த...
“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் போதுமான விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” எனவும் கூறினார். “காணாமல் போனோரின் பிரச்சினை இலகுவாகத் தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகின்றது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும்” எனவும் அவர் கோரினார். தமிழ் மக்கள்...
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ்...
தமிழ் சிவில் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கூட்டு மனுவின் தமிழ் வடிவம்.. இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம். தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின்,...
முல்லைத்தீவு பிலவுக்குடியிருப்பு மக்களின் 30 நாள் தொடர் போராட்டத்தை அடுத்து, அந்த மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாத பட்சத்தில் வடக்குக் கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூடிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி உறுதி அளித்ததின்படி பிலவுக்குடியிருப்பு மக்களின்...
கேப்பாபிலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர். கேப்பாபிலவு தொடர்பாக கலந்துரையாடல், யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில்,தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் பொது அமைப்புக்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, வடகிழக்கு...
பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...
சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு, இடைத்தங்கல் முகாம்களை மூடி, மக்களை சொந்த இடங்களுக்கு மீள அனுப்புவதாக முன்னைய அரசாங்கம் ஐ.நா. மன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பாவனை...
“தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கட்சிகளும் இணைந்திருப்பதால், அரசியல் கட்சிகள் அதிலிருந்து அரசியல் இலாபங்களைப் பெறலாமென நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது, “பேரவையில் அங்கம்...
Loading posts...
All posts loaded
No more posts